அனுமதி! 5 - 12 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி; ஒரே நாளில் மூன்று மருந்துகளுக்கு ஆணையம் ஒப்புதல்

3 week_ago 321
ARTICLE AD BOX

புதுடில்லி : கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 5 - 12 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஒரே நாளில், மூன்று வகையான மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.கொரோனா பரவலுக்கு எதிராக நம் நாட்டில், கடந்தாண்டு ஜன., முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 186 கோடிக்கும் மேற்பட்ட 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 'கோவாக்சின், கோவிஷீல்டு' என்ற இரண்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இதைத் தவிர, வேறு பல தடுப்பூசிகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கைகடந்தாண்டு ஜன., 16ல், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் துவங்கியது. இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு மார்ச் 1 முதல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், ஏப்., 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில், கடந்தாண்டு மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு ஜன., 3 முதல், 15 - 18 வயதுள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. பின், 12 - 14 வயதுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி, மார்ச் 16ல் துவங்கியது.இதற்கிடையே, முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 'பூஸ்டர் டோஸ்' செலுத்துவது, இந்தாண்டு ஜன., 10ல் துவங்கியது.

இந்நிலையில், இம்மாதம் 10ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், முன்னெச்சரிக்கை டோஸ் போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில், கொரோனா பரவல் மூன்றாவது அலை தணிந்து, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. ஆனால், தற்போது ஒரு சில மாநிலங்களில், வைரஸ் பரவல் வேகம் மீண்டும் உயர்ந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், 5 - 12 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான ஆய்வுகள் நடந்து வந்தன. எதிர்பார்ப்புஅதன்படி, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பயலாஜிகல் - இ' நிறுவனம், 'கோர்பேவாக்ஸ்' என்ற தடுப்பூசியை, 5 - 12 வயது குழந்தைகளுக்கு பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது.அதுபோல, ஹைதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பாரத் பயோடெக்' நிறுவனம், 6 - 12 வயது குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கோரியிருந்தது.

இதற்கு, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் நிபுணர் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, இந்த மருந்துகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று அனுமதி அளித்துள்ளது. இதைத் தவிர, குஜராத்தின் ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ஜைடஸ் கேடிலா' நிறுவனத்தின், 'ஜைகோவ் - டி' தடுப்பு மருந்து, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தலா, 2மி.கி., வீதம் மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது.

இதை, 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் மற்றும் மூன்றாவது தவணையில் 3 மி.கி., செலுத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.பயலாஜிகல் - இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி தற்போது 12 - 14 வயது குழந்தைகளுக்கும், கோவாக்சின் 12 - 18 வயது குழந்தைகளுக்கும் செலுத்தப்பட்டு வருகின்றன. ஒரே நாளில், மூன்று அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதற்கு, பா.ஜ., வைச் சேர்ந்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை, மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.'பூஸ்டர் டோஸ்' பலன் என்ன?இந்திய மருத்துவ சங்கத்தின் கொரோனா வைரசுக்கான தேசிய பணிக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் ராஜிவ் ஜெயதேவன் தலைமையிலான குழு, தடுப்பூசியின் பலன்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதன் விபரம்: நாட்டின் மூன்றாவது அலை கொரோனா வைரஸ் பரவலின்போது பாதிக்கப்பட்டோர் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு, 'பூஸ்டர் டோஸ்' போடாதவர்களில், 45 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டவர்களில், 70 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதனால், பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பிரதமர் மோடி இன்று ஆய்வுநாட்டின் சில மாநிலங்களில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

அதையடுத்து தற்போதுள்ள சூழ்நிலை, மாநிலங்களின் தயார் நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்கிறார். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கும் இக்கூட்டத்தில், மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இவர்களைத் தவிர, மத்திய சுகாதார அமைச்சர், உயரதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

read-entire-article