அவ்ளோ நல்லவங்களா நீங்க.?! பீஸ்ட் நஷ்டத்தை கோடிகளில் செட்டில் செய்த சன் பிக்ச்சர்ஸ்.!

1 week_ago 18
ARTICLE AD BOX

எனோ தெரியவில்லை, சன் பிக்ச்சர்ஸ் சமீபத்தில் எடுத்து பிரமாண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பெரிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறி வருகின்றன. பெரிய ஹீரோ, இதற்கு முன்னர் ஹிட் கொடுத்த இயக்குனர் என்றாலும் இது தற்போது ஒர்க் அவுட் ஆக மறுக்கிறது.

அப்படிதான், சூப்பர் ஸ்டார் நடித்த அண்ணாத்த மற்றும் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் என இரு படங்களுமே ரசிகர்களுக்கு கொடுத்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டன.

இதில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர், பீஸ்ட் இயக்குனர் நெல்சன் இதற்கு முன்னர் கொடுத்த டாக்டர் எனும் பெரிய வெற்றி என பீஸ்ட் படம் மீது அதிக எதிர்பார்ப்பை கூட்டின.

ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், இப்படம் தீவிரவாதத்தை பற்றிய சர்ச்சை கருத்துக்களை கூறியதாக சொல்லி, படத்தை குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யவும் செய்துவிட்டனர்.

இதையும் படியுங்களேன் – சூர்யாவையும் ‘அந்த’ ஹீரோயினையும் பிரிக்க பக்கா பிளான்.! ஒரு வேளை ஜோதிகா சொல்லிருப்பாங்களோ?!

இதனால் , சன் பிக்ச்சர்ஸிடம் இருந்து வெளிநாட்டு உரிமத்தை வாங்கிய நிறுவனம் பெரிய நஷ்டம் அடைய இருந்தது. இதனை அறிந்த சன் பிக்ச்சர்ஸ் அந்த வெளிநாட்டு நிறுவனத்திடம் விசாரித்துள்ளது. அதன்படி, குவைத்தில் ஒரு 2.50 கோடி , கத்தாரில் 80 லட்சம் நஷ்டமாகும் நிலை என அறிந்த சன் பிக்ச்சர்ஸ், உடனடியாக அந்த பணத்தை கழித்துவிட்டு, மீதி பணம் மட்டும் கொடுத்துவிடுங்கள் என கூறி அந்த வெளிநாட்டு விநியோகிஸ்தருக்கு ஆக இருந்த பெரிய நஷ்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளது சன் பிக்ச்சர்ஸ்.

read-entire-article