இந்தியாவில் தொடர்ந்து 9வது வாரமாக அந்நிய செலாவணி இருப்பு சரிவு!

1 week_ago 18
ARTICLE AD BOX

For Quick Alerts

Subscribe Now  

For Quick Alerts

ALLOW NOTIFICATIONS  

இந்தியாவில் அந்நிய செலாவணி இருப்பு தொடர்ந்து 9வது வாரமாக சரிந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. இந்தியாவின் இறக்குமதியில் 50 சதவீதத்திற்கும் மேல் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் பங்குதான் உள்ளது. அப்படி இறக்குமதி செய்யும் போது டாலர்கள் மூலம் தான் பணத்தைச் செலுத்த வேண்டும். எனவே இந்தியா எப்போதும் குறிப்பிட்ட அளவில் அந்நிய செலாவணியைக் கையிருப்பில் வைத்திருக்கும். இந்தியாவிடம் இப்போது ஒரு வருட தேவைக்கு அந்நிய செலாவணி கையிருப்பில் வைத்துள்ளது. இதுவே 20 ஆண்டுகளுக்கு முன்பு சில வாரங்கள் வரையிலான தேவைக்கு தான் இந்தியாவிடம் அந்நிய செலாவணி கையிருப்பு இருக்கும்.

சர்வதேச விமான சேவையில் சாதனை படைத்த இண்டிகோ.. ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிலை என்ன?

அந்நிய செலாவணி கையிருப்பு

அந்நிய செலாவணி கையிருப்பு

இந்நிலையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 6-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.77 பில்லியன் டாலரிலிருந்து 595.95 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தரவு காட்டுகிறது.

அதற்கு முந்தைய வாரம் 2.695 பில்லியன் டாலரிலிருந்து 597.728 பில்லியன் டாலராக அந்நிய செலாவணி இருப்பு சரிந்துள்ளது. ஆர்பிஐ ஒவ்வொரு வார இறுதியிலும் 600 பில்லியன் டாலருக்கு குறைவாக அந்நிய செலாவணி இருப்பு செல்லாதவாறு பார்த்துக்கொள்ளும்.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து 78.24 ரூபாயாக உள்ளது. இதனால் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாகச் செலவாகத் தொடங்கியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவும் இந்தியாவில் அந்நிய செலாவணி தொடர்ந்து சரிய காரணமாக உள்ளது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்


அமெரிக்கா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, இந்தியாவிலிருந்த அந்நிய முதலீடுகள் பெரும் அளவில் சரிந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 28.05 பில்லியன் டாலர் வரை அந்நிய செலாவணி இருப்பு குறைந்துள்ளது.

இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 2021 செப்டம்பர் 3-ம் தேதி 642.453 டாலராக இருந்தது. அதுவே 2022, மே 9-ம் தேதி இந்த ஆண்டின் குறைந்தபட்ச இருப்பாக 595.95 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.

தங்கம் இருப்பு

தங்கம் இருப்பு

அதே நேரம் தங்கம் இருப்பு 135 மில்லியன் டாலரில் இருந்து 41.739 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு நிலை மே 6ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11 பில்லியன் டாலரில் இருந்து 4.990 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Forex Reserves Falls Continue 9th Week From $1.774 Billion To $ 595.954 Billion

India's Forex Reserves Falls Continue 9th Week From $1.774 Billion To $ 595.954 Billion | இந்தியாவில் தொடர்ந்து 9வது வாரமாக அந்நிய செலாவணி இருப்பு சரிவு!

Story first published: Saturday, May 14, 2022, 19:23 [IST]

read-entire-article