சிம்புவுக்கு திருமணம் – மணப்பெண் யாருன்னு பாருங்க..!

1 week_ago 20
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் இயக்குனர் பாடகர் நடன இயக்குனர் என பல வித்தைகளை பெற்றுள்ள ஒருவர் என்றால் அந்த பட்டியலில் நடிகர் சிம்புவும் ஒருவர்.

இவரை சுற்றி எப்போதும் ஏதாவது சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். அதில் முக்கியமானது காதல் சர்ச்சைகள். வல்லவன் படம் தொடங்கி தற்போது வாலு படம் வரை இவர் செய்த குறும்புகள் ஏராளம்.

இடையில் என்ன *****-க்கு லவ் பண்றோம் என்று இவர் பாடிய டம்மி பாடல் ஒன்று இணையத்தில் கசிந்ததால் பெரும் சிக்கலுக்கு உள்ளானார் நடிகர் சிம்பு. இப்படி அடிக்கடி தன்மேல் சர்ச்சையை சட்டை போடுவது போல போட்டுக் கொள்ளும் நடிகர் சிம்புவுக்கு திருமணம் எப்போது என்பதுதான் சிம்பு ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கேள்வியாக இருக்கின்றது.

எப்போது திருமணம்..?

சிம்புக்கு பிறகு பிறந்த, அவரது தம்பி மற்றும் தங்கை ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் இவருக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பது ரசிகர்களிடையே இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டிற்கு மூத்த பிள்ளையாக இருக்கும் சிலம்பரசன் இப்படி ஒத்தையாக திருமணம் செய்து கொள்ளாமல் நிற்கிறாரே என்று வேதனையில் இருக்கிறார் டிஆர் ராஜேந்தர். நடிகர் சிலம்பரசன் வாழ்க்கையில் தோன்றிய காதல்கள் எதுவும் ரொம்ப காலம் நிலைக்கவில்லை.

அந்தவகையில் தற்போது இவருடன் ஈஸ்வரன் திரைப்படத்தில் சேர்ந்து நடித்த நடித்த நடிகை நீதி அகர்வால் உடன் இவர் காதலில் இருப்பதாக சமீபகாலமாக செய்திகள் வந்துகொண்டிருந்தது. அந்த தகவல் பொய்யானது என்று விளக்கம் அளித்தார் சிம்புவின் தந்தை நடிகர் டி ஆர் ராஜேந்தர்.

லிவ் இன் டுகெதர்..

ஆனாலும் இந்த பேச்சு அடங்கிய பாடில்லை. நடிகர் சிம்புவும் நிதி அகர்வாலும் லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள் எனவும், வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் தற்போது கூறப்படுகிறது.

பையனுக்கு கல்யாணம் பண்ணா போதும் என்று நிதி அகர்வால் தன்னுடைய மகளை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா..? டி ராஜேந்தர் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

சிம்பு வாழ்க்கையில் காதல் வருவதும் போவதுமாக இருக்கின்றது. இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் உடனான இந்த காதலாவது நிலைக்குமா..? திருமணம் வரை செல்லுமா..? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விரைவில் திருமணம்..?

மேலும் சிம்புவும் இந்த நடிகையும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கிளம்பும் செய்திகள் இது ஒன்றும் முதல் முறை அல்ல.

கிட்டத்தட்ட சிம்புவுடன் நடிக்கும் அவருடைய வயதுக்கு ஒத்த அல்லது அவரை விட வயது குறைந்த நடிகைகள் நடிக்கும் பொழுது இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கள் கிளம்புவது பின்பு அது கிசுகிசுவாகவே முடிவடைந்து விடுவதும் வாடிக்கை தான்.

அந்த வகையில் இந்த இந்த தகவல்கள் நிஜமாக இருக்குமோ அல்லது நிஜமாகவே சிம்புவுக்கு திருமணம் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்

read-entire-article