சில்லரை விற்பனை வணிகம் ஏப்ரலில் 23 சதவீதம் உயர்வு

1 week_ago 14
ARTICLE AD BOX

புதுடில்லி:நாட்டின் சில்லரை வணிகம், கடந்த ஏப்ரல் மாதத்தில், 23 சதவீத வளர்ச்சியை அடைந்திருப்பதாக, இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில், சில்லரை விற்பனை, கொரோனா தொற்றுக்கு முந்தைய 2019 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 23 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் வட பகுதியில் 32 சதவீதமும்; மேற்கில் 24 சதவீதமும் விற்பனை அதிகரித்து உள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள், கொரோனா தொற்றுக்கு முன் வந்ததை போல வந்து, பொருட்களை வாங்கிச் செல்ல துவங்கி இருக்கின்றனர்.
இதனால் விற்பனை அதிகரித்து வருகிறது.அதிலும், துரித உணவக பிரிவில் 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரலில், 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நுகர்பொருட்கள் பிரிவு 26 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.இருப்பினும், அழகு, ஆரோக்கியம் போன்ற பிரிவுகளில் வளர்ச்சி இன்னும் எட்டப்படவில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

read-entire-article