சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு... கோரிக்கை நிராகரிப்பு

3 week_ago 136
ARTICLE AD BOX

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயன் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்த 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா, சதிஷ், ரோபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த எம். ராஜேஷ் இந்த படத்தை இயக்கியிருந்தார். 2019 மே 17-ம்தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆனது.

மெகா ஹிட் தரக்கூடிய கூட்டணி இருந்தும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப் சாப்டர் 2 : 4-வது பாடலாக ‘மான்ஸ்டர்’ ரிலீஸ்… ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்

இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு ரூ.15 கோடி சம்பளம் என நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா தனக்கு ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்த சிவகார்த்திகேயன், ரூ 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் தனக்கு அளித்த ரூ.11 கோடிக்கு வருமான வரி பிடித்தம் செய்து அளித்ததாகவும் ஆனால் அதனை வரிமானவரித்துறையிடம் ஞானவேல் ராஜா செலுத்தவில்லை எனவும் சிவகார்த்திகேயன் குற்றம் சாட்டியுள்ளார்.  தனக்கு மீதமுள்ள சம்பள பாக்கியை அளிக்கும்வரை ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்று சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க - நடிகர்களுக்கு அதிக சம்பளம் தருவது தயாரிப்பாளர்களின் விருப்பம் - மணிரத்னம்!

இதற்கு ஞானவேல் ராஜா, மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ. 20 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை என்றும், சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் படத்தை தயாரித்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிவகார்த்திகேயன் - ஞானவேல் ராஜா இடையிலான பிரச்னையை சுமுகமாக தீர்ப்பதற்கு சமரச தீர்வாளரை நியமித்து நீதிபதி சுந்தர் உத்தரவிட்டார். மேலும், ஞானவேல் ராஜா படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்று வலியுறுத்திய சிவகார்த்திகேயனின் கோரிக்கையை நீதிபதி நிரகாரித்தார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

read-entire-article