ARTICLE AD BOX
நாம் இப்போது மே மாதத்தின் பாதியில் இருக்கிறோம். மே மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதில் வரும் வாரம் மட்டும் இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.
3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு?
இந்த வங்கி விடுமுறைகள் நாம் வசிக்கும் நகரங்களைப் பொருத்து மாறும். எனவே மே 16-ம் தேதி நீங்கள் வசிக்கும் நகரத்தில் வங்கிகள் இயங்குமா? அல்லது விடுமுறையா? மே மாதம் இன்னும் எந்த நாட்களில் எல்லாம் வங்கிகள் விடுமுறை என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

மே 14 மற்றும் 15
மே 14 இன்று இரண்டாவது சனிக்கிழமை என்பதற்காக விடுமுறை. மே 15 ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை. வங்கிகள் பொதுவாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமையில் விடுமுறைகள் இருக்கும்.
புத்த பூர்ணிமா
வரும் வாரம் கூடுதலாக மே 16-ம் தேதி புத்த பூர்ணிமா என்ற காரணத்துக்காக வங்கிகள் விடுமுறையில் இருக்கும் என கூறுகின்றனர். ஆக மே 14 முதல் தொடர்ந்து 3 நாட்கள் பல இடங்களில் விடுமுறையாக இருக்கும்.

தமிழ்நாட்டில் மே 16-ம் தேதி வங்கி விடுமுறையா?
மே 16, 2022 (திங்கட்கிழமை): புத்த பூர்ணிமா [திரிபுரா, பேலாபூர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, புது தில்லி சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்] ஆனால் சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் விடுமுறையில்லாமல் இயங்கும்.

மேலும் விடுமுறைகள்
இது மட்டுமல்லாமல் மே 22 (ஞாயிறு), மே 28 (4வது சனிக்கிழமை), மே 29 (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் மே மாதம் வங்கிகள் விடுமுறையாக இருக்கும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
May 2022, Buddha Purnima Bank Holiday Alert in Tamil
May 2022, Buddha Purnima Bank Holiday Alert in Tamil
Story first published: Saturday, May 14, 2022, 20:25 [IST]