ARTICLE AD BOX
‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம்
பதிவு செய்த நாள்
14
மே
2022
19:50
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ நிறுவனத்தை, கையகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இருப்பினும், எவ்வளவு தொகைக்கு டைன் அவுட் நிறுவனத்தை வாங்க இருக்கிறது என்பது குறித்த தகவல் எதையும், ஸ்விக்கி தெரிவிக்கவில்லை.டைன்அவுட் நிறுவனம், 50 ஆயிரம் உணவகங்கள்; 20 நகரங்கள் என, பெரிய ‘நெட்வொர்க்’ வசதியுடன் செயல்பட்டு வருகிறது. டைன் அவுட் நிறுவனத்தை கையகப்படுத்தினாலும், அந்நிறுவனம் அதற்கான செயலி வசதியுடன், தனியாகவே செயல்படும் என்றும், ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
மேலும், டைன் அவுட் நிறுவனத்தின் நிறுவனர்கள் அங்கித் மல்கோத்ரா, நிஹில் பாக்ஷி, ஷாகில் ஜெயின் மற்றும் விவேக் கபூர் ஆகியோர், கையகப்படுத்தலுக்கு பின், ஸ்விக்கியில் இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி:நாட்டின் சில்லரை வணிகம், கடந்த ஏப்ரல் மாதத்தில், 23 சதவீத வளர்ச்சியை அடைந்திருப்பதாக, இந்திய சில்லரை ... மேலும்
‘இ -– முத்ரா’ பங்கு வெளியீடுடிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ்களை வழங்கும் ‘இ – முத்ரா’ நிறுவனத்தின் புதிய பங்கு ... மேலும்
புதுடில்லி:‘பியூச்சர்’ குழுமத்தின் தலைவரான கிஷோர் பியானியின் மகள், அஷ்னி பியானி, ‘பியூச்சர் கன்ஸ்யூமர்’ ... மேலும்
புதுடில்லி:வீட்டு உபயோக சாதனங்களான வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர், ‘ஏசி, டிவி’ போன்றவற்றின் தயாரிப்பு செலவு ... மேலும்
புதுடில்லி:‘போர்ப்ஸ்’ நிறுவனம் தொகுத்து வெளியிட்டு உள்ள, உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் பட்டியலில், ... மேலும்
மேலும் செய்திகள் ...
|
Advertisement |
Advertisement |
Advertisement |
![]() |
|
|