6 வயது சிறுமி பலி- ஆத்திரத்தில் வாகனத்திற்கு தீ வைத்து ஓட்டுனரை கொன்ற பொது மக்கள்

1 week_ago 18
ARTICLE AD BOX

சம்பவத்தின் வீடியோ காட்சியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில் இருந்து 38 கி.மீ தொலைவில் உள்ள சிராசிங் பகுதியில் நேற்று இரவு பயணிகளை பல பயன்பாடு வாகனம் ஒன்று மோதியதில் 6 வயது சிறுமி பலியானார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வாகனத்தை சிறைபிடித்து தீ வைத்து எரித்தனர். பின்னர், தப்பிக்க முயன்ற வாகன ஓட்டுனரை அடித்து தாக்கி தீயில் தள்ளினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீ காயங்களுடன் இருந்த ஓட்டுனரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.. திரிபுரா புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா தேர்வு

read-entire-article